Tuesday, August 16, 2011

இலங்கை தமிழில் நெருப்பு நரி உலாவி 6.0 வந்து விட்டது

சமீபத்தில் தான் தனது ஐந்தாவது பதிப்பை வெளியிட்டது . ஆனால் பெருகி வரும் போட்டியின் காரணமாக அதற்குள் தனது அடுத்த பதிப்பை வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டுள்ளது. ஏழுபது மொழிகளில் தன்னை அறிமுகப்படுத்தி உள்ள மொசில்லா தமிழிலும் இலங்கை தமிழிலும் தன் பதிப்பை வெளியிட்டுள்ளது .
நெருப்பு நரி உலாவியானது அதிக பயனாளிகளை கொண்டதாக இருந்து வந்தது ஆனால் சமீப காலமாக அதன் வளர்ச்சி கொஞ்சம் குறைந்துள்ளது .கூகுள் க்ரோம் வந்ததிலிருந்து அதன் பாடு திண்டாட்டமாகத்தான் இருக்கிறது .

Download    
                            தமிழ்
                           இலங்கை தமிழ்
                           ஆங்கிலம்
மொசில்லா தன் பழைய நிலையை அடைய வாழ்த்துவோம் .அதன் புதிய பதிப்பை பதிவிறக்கி பயன்படுத்துவோம் . 

Download As PDF

Thursday, May 19, 2011

Hard disk ஐ உங்கள் விருப்பத்துக்கு Partition செய்ய கலக்கல் மென்பொருள்.

இவ் மென்பொருள் மூலம் எளிய முறையில் partition அளவுகளை கூட்டலாம் / குறைக்கலாம். partitionகளை அப்படியே Copy செய்து கொள்ளலாம். புதிய partitionகளை உருவாக்கலாம் partitionகளை நீக்கலாம். ஏற்கனவே உள்ள partitionகளை இரண்டாக பிரிக்கலாம். மேலும் பல வசதிகள் உள்ளன. partitionகளை Format செய்து கொள்ளலாம்.


இவை அனைத்தையும் உங்கள் Hard disk இல் எவ்வித தகவல் இழப்பும் (Data Loss) இன்றி செய்ய முடியும். இந்த மென்பொருள் வீட்டு பயனர்களுக்கு (Home Use) முற்றிலும் இலவசம்.  இது Windows 2000, Xp, Vista, 7 இயங்குதளங்களில் இயங்கும்.
இவ் மென்பொருளை தரவிறக்கம் செய்ய Download 

Download As PDF

Sunday, May 15, 2011

அழிந்த பைல்களை மீட்க அழகிய 2 மென்பொருட்கள் (Recovery s.w)




ஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்இதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் பார்ப்போம்.


1.டிஸ்க் டிக்கர் (Disk Digger)கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.மீண்டும் பார்மட் செய்யப்பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். 

தரவிறக்கம் செய்ய : Download

2.ரெகுவா(Recuva)இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. இது உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது. எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.
தரவிறக்கம் செய்ய : Download



Download As PDF

Saturday, May 14, 2011

கணனியில் T.V பார்க்க கலக்கல் மென்பொருள்

கணினியில் இருந்தவாறே உலகின் அனைத்து  நாடுகளில் இருந்தும் ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க ஒரு இலவச மென்பொருள் READON TVMOVIE REDIO PLAYER. 
  
இந்த மென்பொருளின் மூலம் உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளிபரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க முடிவதுடன் அவற்றை பதிவு செய்ய வசதியும் உண்டு. ஆடியோ க்களை MP3 வடிவில் பதிவு செய்யலாம் . FLASH GAMES , AUDIO , VIDEO பைல்களை Search செய்யும் வசதியும் உண்டு.
 
இந்த மென்பொருளில் இருந்தவாறு மிக அண்மையில் வெளியாகிய திரைப்படங்களை வீடியோ சேர்ச் மூலம் பெறலாம். 1000 க்கு மேற்பட்ட FLASH GAMES வசதியினை ஆன்லைனில் தருகிறது. இந்த வசதியினை பெற இந்த மென்பொருளில் PLUGINS என்ற மெனுவிற்கு சென்று உங்களுக்கு விரும்பியதை இன்ஸ்டால் செய்யல்லாம். youtube தளத்திற்கான இணைப்பும் உள்ளது. இது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்பட வல்லது.
தரவிறக்கம் செய்ய - Download


Download As PDF

Friday, May 13, 2011

ஒரே மென்பொருளில் Audio, Video, Photo போன்ற அனைத்து converting..


Format factory 2.60 பற்றி இந்த பதிவில் காண்போம். இது ஒரு இலவச மென்பொருளாகும். இதன் பயன்பாடுகள்


1. எந்த வீடியோவையும் MP4, AVI, 3GP, RMVB, GIF, WMV, MKV, MPG, VOB, MOV, FLV, SWF format ஆக மாற்றலாம்.

2. எந்த ஆடியோவையும் MP3, WMA, FLAC, AAC, MMF, AMR, M4A, M4R, OGG, MP2, WAV, WavPack format பார்மட்களாகவும்.

3. புகைப்படங்களை JPG, PNG, ICO, BMP, GIF, TIF, PCX,TGA  format ஆக மாற்றலாம்.

4. மேலும் இதில் உங்கள் மொபைல் போனிற்க்காகவும் வீடியோக்களை மாற்றிக்கொள்ளலாம்.

5. மற்றும் DVD Ripping  எனப்படும் DVD to CD வசதி, Music CD யிலிருந்து Audio File ஆக மாற்றும் வசதி, DVD/ CD யை ISO/ CSO ஆக மாற்றும் வசதிமேலும்  ISO <-> CSO வசதியும் உள்ளது.

6. மேலும் இதில் உள்ள Advanced Option மூலமாக Video joiner, Audio Joiner, மற்றும் Mux எனப்படும் ஒளியையும்ஒலியையும் ஒன்றிணைக்க உதவும் வசதிகள்,மற்றும் Media File Info வசதிகளும் உள்ளது

7. இதன் மூலம் RMVB, H264, DIVX, XVID, WMV2 ஆகிய Encodingகளை துல்லியமாகவும் அதிவிரைவாகவும் Encoding செய்யலாம்.

8. இதில் Convert செய்யப்போகும் வீடியோவின் உள்ளார்ந்த இயல்புகளையும் நமக்குத்தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம். ஒரே நேரத்தில் எண்ணற்ற பைல்களை Convert செய்யலாம், Converting முடிந்ததும் கணிப்பொறியை Auto Shutdown செய்யும் வசதியும் உள்ளது.

இவ் மென்பொருளை Downloadசெய்ய - Download link

Download As PDF
Related Posts Plugin for WordPress, Blogger...