
இனி எந்த போல்டரை உங்களுடையதாக மட்டும் ஆக்கிட வேண்டுமோ அதில் ரைட் கிளிக் செய்து Properties கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் Windows sharing என்ற Tab ஐக் click செய்தால் “Make this folder private” என்ற பெட்டி தெரியும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் Apply என்ற பட்டனை அழுத்தவும். உங்களுடைய கம்ப்யூட்டர் அக்கவுண்டிற்கு தனியாக Password இல்லை என்றால் கம்ப்யூட்டர் உங்களிடம் இந்த Folder க்கு Password கேட்கும்.
Password கொடுத்து உறுதி செய்தபின் “Create Password” என்ற பட்டனை அழுத்தி பின் Password விண்டோவினை மூடவும். பின் Properties Dialog Box இல் OK அழுத்தி மூடவும். இனி Password தராமல், நீங்கள் உட்பட, இந்த Folder க்குள் நுழைய முடியாது. எனவே, நீங்களும் இந்த Password ஐ சரியாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.