Thursday, May 19, 2011

Hard disk ஐ உங்கள் விருப்பத்துக்கு Partition செய்ய கலக்கல் மென்பொருள்.

இவ் மென்பொருள் மூலம் எளிய முறையில் partition அளவுகளை கூட்டலாம் / குறைக்கலாம். partitionகளை அப்படியே Copy செய்து கொள்ளலாம். புதிய partitionகளை உருவாக்கலாம் partitionகளை நீக்கலாம். ஏற்கனவே உள்ள partitionகளை இரண்டாக பிரிக்கலாம். மேலும் பல வசதிகள் உள்ளன. partitionகளை Format செய்து கொள்ளலாம்.


இவை அனைத்தையும் உங்கள் Hard disk இல் எவ்வித தகவல் இழப்பும் (Data Loss) இன்றி செய்ய முடியும். இந்த மென்பொருள் வீட்டு பயனர்களுக்கு (Home Use) முற்றிலும் இலவசம்.  இது Windows 2000, Xp, Vista, 7 இயங்குதளங்களில் இயங்கும்.
இவ் மென்பொருளை தரவிறக்கம் செய்ய Download 

Download As PDF

Sunday, May 15, 2011

அழிந்த பைல்களை மீட்க அழகிய 2 மென்பொருட்கள் (Recovery s.w)




ஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்இதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் பார்ப்போம்.


1.டிஸ்க் டிக்கர் (Disk Digger)கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.மீண்டும் பார்மட் செய்யப்பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். 

தரவிறக்கம் செய்ய : Download

2.ரெகுவா(Recuva)இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. இது உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது. எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.
தரவிறக்கம் செய்ய : Download



Download As PDF

Saturday, May 14, 2011

கணனியில் T.V பார்க்க கலக்கல் மென்பொருள்

கணினியில் இருந்தவாறே உலகின் அனைத்து  நாடுகளில் இருந்தும் ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க ஒரு இலவச மென்பொருள் READON TVMOVIE REDIO PLAYER. 
  
இந்த மென்பொருளின் மூலம் உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளிபரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க முடிவதுடன் அவற்றை பதிவு செய்ய வசதியும் உண்டு. ஆடியோ க்களை MP3 வடிவில் பதிவு செய்யலாம் . FLASH GAMES , AUDIO , VIDEO பைல்களை Search செய்யும் வசதியும் உண்டு.
 
இந்த மென்பொருளில் இருந்தவாறு மிக அண்மையில் வெளியாகிய திரைப்படங்களை வீடியோ சேர்ச் மூலம் பெறலாம். 1000 க்கு மேற்பட்ட FLASH GAMES வசதியினை ஆன்லைனில் தருகிறது. இந்த வசதியினை பெற இந்த மென்பொருளில் PLUGINS என்ற மெனுவிற்கு சென்று உங்களுக்கு விரும்பியதை இன்ஸ்டால் செய்யல்லாம். youtube தளத்திற்கான இணைப்பும் உள்ளது. இது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்பட வல்லது.
தரவிறக்கம் செய்ய - Download


Download As PDF

Friday, May 13, 2011

ஒரே மென்பொருளில் Audio, Video, Photo போன்ற அனைத்து converting..


Format factory 2.60 பற்றி இந்த பதிவில் காண்போம். இது ஒரு இலவச மென்பொருளாகும். இதன் பயன்பாடுகள்


1. எந்த வீடியோவையும் MP4, AVI, 3GP, RMVB, GIF, WMV, MKV, MPG, VOB, MOV, FLV, SWF format ஆக மாற்றலாம்.

2. எந்த ஆடியோவையும் MP3, WMA, FLAC, AAC, MMF, AMR, M4A, M4R, OGG, MP2, WAV, WavPack format பார்மட்களாகவும்.

3. புகைப்படங்களை JPG, PNG, ICO, BMP, GIF, TIF, PCX,TGA  format ஆக மாற்றலாம்.

4. மேலும் இதில் உங்கள் மொபைல் போனிற்க்காகவும் வீடியோக்களை மாற்றிக்கொள்ளலாம்.

5. மற்றும் DVD Ripping  எனப்படும் DVD to CD வசதி, Music CD யிலிருந்து Audio File ஆக மாற்றும் வசதி, DVD/ CD யை ISO/ CSO ஆக மாற்றும் வசதிமேலும்  ISO <-> CSO வசதியும் உள்ளது.

6. மேலும் இதில் உள்ள Advanced Option மூலமாக Video joiner, Audio Joiner, மற்றும் Mux எனப்படும் ஒளியையும்ஒலியையும் ஒன்றிணைக்க உதவும் வசதிகள்,மற்றும் Media File Info வசதிகளும் உள்ளது

7. இதன் மூலம் RMVB, H264, DIVX, XVID, WMV2 ஆகிய Encodingகளை துல்லியமாகவும் அதிவிரைவாகவும் Encoding செய்யலாம்.

8. இதில் Convert செய்யப்போகும் வீடியோவின் உள்ளார்ந்த இயல்புகளையும் நமக்குத்தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம். ஒரே நேரத்தில் எண்ணற்ற பைல்களை Convert செய்யலாம், Converting முடிந்ததும் கணிப்பொறியை Auto Shutdown செய்யும் வசதியும் உள்ளது.

இவ் மென்பொருளை Downloadசெய்ய - Download link

Download As PDF

Tuesday, May 10, 2011

PDF File களை வாசிக்க இன்னுமொரு அசத்தலான மென்பொருள்.


அண்மையில் இன்னுமொரு PDF Reader தொகுப்பினைக் காண நேர்ந்தது. இதன் பெயர் நிட்ரோ பிடிஎப் ரீடர் (Nitro PDF Reader). இதுவும் மற்ற PDF Readers 
போல இலவசமாகவே கிடைக்கிறது. இது மற்றவற்றைக் காட்டிலும் வேகமாகவே இயங்குகிறது. இதில் தரப்படும் எடிட்டிங் மற்றும் சேவிங் வசதிகள் மற்றவற்றிலிருந்து வேறுபட்டு உள்ளது.இதன் அனைத்து Option களும், அதன் Headerலேயே தரப்பட்டுள்ளதால், அவற்றை அணுகிப் பெறுவது எளிதாகிறது.இதில் Edit செய்யப்படும் PDF Fileகள், மற்ற PDF Reader புரோகிராமிலும் படிக்க முடிகிறது. விண்டோஸ் 32, 64 bit  இயக்கத் தொகுப்புகளுக்கென இது உருவாக்கப்பட்டுள்ளது. அவசியம் இதனை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.



Download As PDF

Thursday, May 5, 2011

கோப்புகளின் extension ஐ மொத்தமாக மாற்ற அருமையான மென்பொருள்.


வைரசால் எமது கணினியில் இருந்த MP3 பாடல் கோப்புகள் .mp3 ல் இருந்து.jpg யாக மாறி விட்டன. அவற்றை திரும்ப .mp3 யாக மாற்ற வேண்டி உள்ளது.
என்னிடம் மொத்தம் 500 கோப்புகள் உள்ளன. அவற்றை மொத்தமாக எளிதாக jpg இலிருந்து mp3 யாக மற்ற முடியுமா?"

இதனை செய்ய பல வழிமுறைகள் உள்ளன. Dos கட்டளைகள் தெரிந்தால் எளிமையான விசயம்தான்.

1. Start கிளிக் செய்து Run செல்லுங்கள். அங்கு cmd என்று கொடுத்து OK கொடுங்கள்.

2. command விண்டோ திறக்கும். அங்கே உங்கள் கோப்புகள் எந்த போல்டரில் உள்ளதோ அங்கு மாறி கொள்ள வேண்டும். அதற்கு cd FOLDER PATH கொடுக்க வேண்டும். உதா. cd H:photos  என்டெர் தட்டவும். H: என்று கொடுத்தால் அந்த போல்டருக்கு மாறி இருப்பீர்கள்.

3. அடுத்து rename கட்டளை மூலம்  உங்கள் கோப்புகளின் எக்ஸ்டன்சனை மாற்றி கொள்ளலாம். உதா. ren *.jpg *.mp3 என்டர் தட்டவும். இதன் மூலம் jpg extention உள்ள அனைத்து கோப்புகளும் mp3 extention க்கு மாறி இருக்கும்
DOS கட்டளைகளில் வேலை பார்ப்பது கடினமாக இருப்பதாக நீங்கள் கருதினால்Extension renamer என்ற மென்பொருள் மூலம் செய்து கொள்ள முடியும்.
அந்த இலவச மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
தரவிறக்க சுட்டி >>>>Download


Download As PDF

Windows 7 Boot ஆகவில்லையா?


கணிணி பயன்படுத்தும் பலருக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை 
விண்டோஸ் சில நேரங்களில் ஆன் செய்தவுடன் பூட் ஆகாமல் செயல் இழப்பது தான். Windows cannot start, File missing or corrupt – எதாவது ஒரு கோப்பு காணவில்லை அல்லது அழிந்து விட்டது என்று பிழைச்செய்தியை கொடுக்கும். விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் எனின் இந்த மாதிரி தொலைந்த/ அழிந்த கோப்புகளை கண்டுபிடித்து மீட்பது கொஞ்சம் சிரமமான வேலை. 

ஆனால் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துவோருக்கு இந்த வேலையை NeoSmart நிறுவனத்தின் Windows 7 Recovery disk மென்பொருள் மூலம் எளிமையாக்கலாம். இதன் மூலம் கீழ்க்கண்ட வேலைகளைச் செய்ய முடியும்.

1. Access system recovery option

2. automated system repair

3. complete PC backup
4. command line prompt
5. fixes common issues
இந்த டிஸ்க் மூலம் நீங்கள் பூட் ஆகாத கணிணியில் போட்டு Startup Repair என்று கொடுத்தால் போதும். சில நிமிடங்களில் விண்டொஸ் இயங்குதளத்தில் என்னென்ன கோப்புகள் இல்லையோ அல்லது பாதிக்கப்பட்ட கோப்புகளை சரிசெய்து உங்கள் கணிணியை பழைய நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிடும். மறுபடியும் இயங்குதளத்தை நிறுவும் கடினமான வேலையே இல்லை.
மேலும் கணிணியில் உள்ள கோப்புகளை பேக்கப் செய்வது, குறிப்பிட்ட ரீஸ்டோர் பாயிண்டிலிருந்து (System Restore point) கணிணியை மீட்பதுபொதுவாக ஏற்படும் 
பிழைகளை நிவர்த்தி செய்வது போன்ற அவசியமான வசதிகளைத் தந்துள்ளது. மேலும் Command prompt மூலம் நீங்களே சரிசெய்யும் வசதியும் உள்ளது.


பூட் ஆகாத கணிணியில் இந்த டிஸ்கைப் போட்டதும் F8 பட்டனை அழுத்தினால் போதும். இதன் இந்த டிஸ்க் எந்த நிறுவனத்தின் கணிணிகளிலும் விண்டோஸ் 7 (Home, Professional, Ultimate) இன் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக்கூடியது.


தரவிறக்கச்சுட்டி வசதிகள் எல்லாம் மெனுவாக காட்டப்படும். கணிப்பொறி வல்லுநரை கூப்பிட வேண்டிய அவசியமின்றி நீங்களே சுலபமாக செய்து விட முடியும்.

இதனைத் தரவிறக்கினால் iso வகையிலான கோப்பாக கிடைக்கும். இதை அப்படியே சிடி/டிவிடியில் எதாவது ஒரு CD Burner மென்பொருள் கொண்டு எழுதிக் கொள்ளுங்கள். (Cd Writing). ISO கோப்புகளை சிடியில் எழுதுவதற்கு ImgBurn மென்பொருள் 
பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
தரவிறக்க சுட்டி >>>>Download
Download As PDF

Tuesday, May 3, 2011

இனி உங்கள் கையடக்கத்தொலைபேசிகளிலும் திருக்குறள்...


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
         பகவன் முதற்றே உலகு.

ஒப்பற்ற உலகப்பெரும் தமிழ் இலக்கியமாக திகழும் திருக்குறளானது தற்பொழுது கையடக்கத்தொலைபேசிகளில் பயன்படுத்தத்தக்க வகையில் மென்பொருள் வடிவமாக உருவாக்கப்படுள்ளது. இந்த மென்பொருளை கையடக்கத்தொலைபேசிகளில் தரவிறக்கி தமிழ்மொழியிலையே பயன்படுத்தத்தக்க முறையில் இந்த மென்பொருளானது வடிவமைக்கப்படுள்ளது. மூன்று பால்களாகிய அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் பதின்மூன்று அதிகாரங்களையும் தாங்கி 1330 குறள்களுடனும் அதன் பொருள்விளக்கங்களுடனும் மென்பொருளானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் பயனுள்ளதொரு மென்பொருள்.

 



மென்பொருளை தரவிறக்க - Download








Download As PDF

Monday, May 2, 2011

Notepad ஐ Diary ஆக்கலாம் வாங்க...

உங்கள் Notepad ஐ Diary ஆக மாற்ற பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்.

1. Open Notepad
2. Type "   . LOG   "
3. இப்போது உங்கள் Notepad ஐ "Diary" என்ற பெயரில் Save செய்யவும்

இப்போது உங்கள் Notepad Diary ஆகிவிட்டது. அவ்வளவுதான்.


Download As PDF

Screen shot எடுப்பதற்கு இன்னுமொரு ஒரு அருமையான மென்பொருள்


Screen shot எடுப்பதற்கு இன்னுமொரு ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளின் மூலம் முழுத்திரை, குறிப்பிட்ட திரை, திரையில் குறிப்பிட்ட பகுதி மற்றும் மவுஸ் தெரிய வேண்டுமானால் அதனுடனும் எடுக்க முடியும்.


நிறுவிய பின் Task bar இல் உள்ள icon ஐ வலது கிளிக் செய்தால் தோன்றும் திரையில் எந்தமாதிரி Screenshot எடுக்கவேண்டும் என்பதை தேர்வு செய்தால் அதன் போல் Screenshot எடுக்கப்பட்டு விடும்.
மேலும் keyboardல் உள்ள Prt Scr பட்டனை பயன்படுத்தி எளிமையாக கையாள முடியும். உதாரணமாக Prt Scr பட்டனை மட்டும் அழுத்தினால் திரையில் குறிப்பிட்ட பகுதியை எடுக்க முடியும்.

மேலும் Preferences என்பதை கிளிக் செய்து உங்கள் வசதிக்கேற்ப தேவையானவற்றை மாற்றி கொள்ளலாம். Screen Shot எடுத்த பின் மேலும் மாற்றங்கள் செய்ய விரும்பினாலும் செய்து கொள்ளலாம்.உதாரணமாக வார்த்தைகள் சேர்க்க விரும்பினாலும் சேர்த்து கொள்ளலாம். இதனை இயக்குவது என்பது மிகவும் எளிது.

இவ் மென்பொருளை Download செய்வதற்கான சுட்டி
              >>>>Download<<<<
Download As PDF

Sunday, May 1, 2011

விண்டோஸ் Boot Screen ஐ மாற்றலாம் வாங்க...


Windows திரையை நமக்கு பிடித்த மாதிரி  மாற்றுவதற்கு bootskin என்ற மென்பொருளை பயன் படுத்தலாம். 


                          >>>>>>>>>> Download <<<<<<<<<<


இந்த மென்பொருளை நிறுவி அதிலுள்ள திரைகளில் நமக்கு பிடித்தபடி மாற்றலாம். அல்லது random முறையில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு திரை தோன்றும்படி செய்யலாம்.


இதிலுள்ள திரைகள் நமக்கு பிடிக்காவிட்டால் இணையத்திலிருந்து நமக்கு பிடித்ததை  
தரவிறக்கம் பண்ணிக்கொள்ளலாம். 
இது முற்றிலும ஒரு இலவசமான மென்பொருள். 


                  
Download As PDF
Related Posts Plugin for WordPress, Blogger...