Thursday, May 5, 2011

கோப்புகளின் extension ஐ மொத்தமாக மாற்ற அருமையான மென்பொருள்.


வைரசால் எமது கணினியில் இருந்த MP3 பாடல் கோப்புகள் .mp3 ல் இருந்து.jpg யாக மாறி விட்டன. அவற்றை திரும்ப .mp3 யாக மாற்ற வேண்டி உள்ளது.
என்னிடம் மொத்தம் 500 கோப்புகள் உள்ளன. அவற்றை மொத்தமாக எளிதாக jpg இலிருந்து mp3 யாக மற்ற முடியுமா?"

இதனை செய்ய பல வழிமுறைகள் உள்ளன. Dos கட்டளைகள் தெரிந்தால் எளிமையான விசயம்தான்.

1. Start கிளிக் செய்து Run செல்லுங்கள். அங்கு cmd என்று கொடுத்து OK கொடுங்கள்.

2. command விண்டோ திறக்கும். அங்கே உங்கள் கோப்புகள் எந்த போல்டரில் உள்ளதோ அங்கு மாறி கொள்ள வேண்டும். அதற்கு cd FOLDER PATH கொடுக்க வேண்டும். உதா. cd H:photos  என்டெர் தட்டவும். H: என்று கொடுத்தால் அந்த போல்டருக்கு மாறி இருப்பீர்கள்.

3. அடுத்து rename கட்டளை மூலம்  உங்கள் கோப்புகளின் எக்ஸ்டன்சனை மாற்றி கொள்ளலாம். உதா. ren *.jpg *.mp3 என்டர் தட்டவும். இதன் மூலம் jpg extention உள்ள அனைத்து கோப்புகளும் mp3 extention க்கு மாறி இருக்கும்
DOS கட்டளைகளில் வேலை பார்ப்பது கடினமாக இருப்பதாக நீங்கள் கருதினால்Extension renamer என்ற மென்பொருள் மூலம் செய்து கொள்ள முடியும்.
அந்த இலவச மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
தரவிறக்க சுட்டி >>>>Download


Download As PDF

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...