Friday, April 29, 2011

உங்கள் Pen Drive ஆல் உங்கள் கணனிக்கு பூட்டுப் போடலாம் வாங்க.



உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது? லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர் (Predator)என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. 

இதனை ஒரு Pen Drive இல் பதிந்து வைத்து, அந்த ஸ்டிக்கை, உங்கள் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன்படுத்தலாம்.இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம். முதலில் பிரிடேட்டர் புரோகிராமினை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். 
                   <<<<Download  >>>>
இதனை உங்கள் கணனியில் install செய்யவும். இப்போது பிரிடேட்டர் பைலை இயக்குங்கள். உங்கள் யு.எஸ்.பி.போர்ட்டில், யு.எஸ்.பி. ஸ்டிக்கினை இன்ஸெர்ட் செய்திடும்படி உங்களைக் கம்ப்யூட்டர் கேட்டுக் கொள்ளும். பின் இதற்கான பாஸ்வேர்ட் ஒன்றை நீங்கள் அமைக்க வேண்டும். அவ்வளவுதான்.
இனி விண்டோஸ் ஸ்டார்ட் செய்கையில், இந்த யு.எஸ்.பி. ஸ்டிக்கை அதன் போர்ட்டில் செருகி வைக்கவும். விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும்போது பிரிடேட்டரை இயக்கவும். பின், எப்போதெல்லாம், கம்ப்யூட்டரை லாக் செய்து செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அப்போது, இந்த யு.எஸ்.பி.ஸ்டிக்கினை எடுத்துச் செல்லலாம். 
எடுத்தவுடன் கீ போர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்யப்பட்டு, திரை கருப்பாக மாறிவிடும். மீண்டும் இதனை அதன் இடத்தில் செருகிப் பயன்படுத்தினால் மட்டுமே, கம்ப்யூட்டர் இயங்கும்.

முயற்சி செய்து பாருங்கள்.
Download As PDF

Wednesday, April 27, 2011

10 நிமிடத்தில் Windows XP install பண்ண வேண்டுமா?

windows 7 வந்தாலும் நாம் இப்போதும் அதிகம் பயன்படுத்து Windows Xp தான் . OS Install செய்வதற்க்கு நமக்கு அதிகபட்சம் 1 மணி நேரம் ஆகக் கூடும். இதை பத்து நிமிடத்தில் முடித்தால் எப்படி இருக்கும். 


முதலில் OS CD ஐ Boot செய்து Format step ஐ முடிக்கவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டர் Restart ஆகும். இப்போது கீழே உள்ளது போல Desktop இல் வரும்.
இப்போது command Prompt இல் சிறு வேலை உள்ளது. Shift + F10 ஐ press செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம். இங்கு "taskmgr" என Type செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம். 
அதில் Processes பகுதி கீழே உள்ளது போல தோன்றும். இங்கு Setup.exe என்பதை நீங்கள் காணலாம், 
அதனை Right click  செய்யவும் அதில்  Set priority என்பதில் real time என்பதை தெரிவு செய்யவும்.
அவ்வளவுதான்.




Download As PDF

Tuesday, April 26, 2011

PEN DRIVE ஐ RAM ஆக பயன்படுத்துவது எப்படி? பழசு ஆனால் புதுசு..!


நமது கணனிகளில் சில வேளை போதுமான அளவு RAM  காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக  RAM ஒன்றை பொருத்துவதானால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேளை  Pen Driveகளின் விலை குறைவானதே. 
முதலில் Windows Xp யில் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணனியின் performance ஐ அதிகரிப்பது  என பார்ப்போம். 

முதலில் Pen Drive ஒன்றை ( குறைந்தது 1GB ) USB port வழியாக பொருத்துங்கள்.
  1. பின் My Computer ல் Right Click செய்து  Properties தெரிவு செய்யுங்கள்.
  2. அதிலுள்ள Advanced பகுதியில்  Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
  3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து Pen Drive வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
  4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max  எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
  5. பின்னர் Set செய்து உங்கள் கணனியை Restart செய்யுங்கள்.

அல்லது  ReadyBoost  அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்  Pen Drive வை பொருத்தி eboostr control pannel இல் pendrive வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)

Windows 7 யில் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்துவது என பார்ப்போம்.  உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா "உங்கள் கணனி 256GB RAM கொண்டிருந்தால்...."  8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடைய pendrive பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம். 
 உங்கள்  Pen Drive ல் Right Click செய்து  Properties தெரிவு செய்யுங்கள்.
அதில்  ReadyBoost  பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்

"Space to reserve for system speed" என்ற இடத்தில் கூட்டி விடவும்.

இப்போது  Apply செய்து விடுங்கள் , அவ்வளவுதான் ...  உயர் performance ஐ அனுபவியுங்கள்...
Download As PDF

மொபைல் கமராவை இணைய கமராவாக பயன்படுத்துவது எப்படி?



இன்றைய நாளில் அனைவரும் சொந்தமாக கமராவுடன் கூடிய மொபைலை வைத்துள்ளார்கள். சிலரது மொபைல்களில் வெப் கேமரா இருக்கும் அதற்கொன்று தனிப்பட்ட கேபிள் வைத்து இருப்பார்கள். ஆனால் இவற்றின் விலையோ மிக அதிகமாக இருக்கும். அவ்வளவு விலை போட்டு வாங்க நாம் எங்கேபோவது. அதனால் இன்றைய நாளில் அனைவரும் நாம் கையில் உள்ள கமராவுடன் கூடிய மொபைலை வைத்து எப்படி வெப் கேமராவாக பயன்படுத்துவது என கூறுகிறேன். முதலில் கீழே தரப்பட்டட இணைய முகவரிக்கு செல'லவும்.
                       Go to Address ------------->>>>


டவுன்லோட் கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்திற்கு செல்லும். இதில் நோக்கியா இயங்குதளம் symbian S60 2nd Edition , symbian S60 3rd Edition , windows , Linux , Jme , windows mobile , Android என வரிசையாக காணப்படும்.
01. இதில் மொபைல்லுக்கு உண்டான இயங்குதளத்தின் பைல்லை தரவிறக்கம் செய்து பின் கணினிக்கு உண்டான விண்டோஸ் பைல்லை தரவிறக்கம் செய்யவேண்டும். தரவிறக்கம் செய்தபின் கணிணி மற்றும்மொ பைல்லில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.

02. கணினிக்கு உண்டான Blue tooth சாதனம் கணினியில் சொருகிய பின்பு மொபைல்லில்
Blue tooth On செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் மொபைல்லில் SMART CAM->CONNECT->BLUETOOTH Click செய்யவும். இணைய கேமரா ரெடி. இனிமேல் வெப் கேமராவை காசுகொடுத்து வாங்க தேவை இல்லை . இந்த மென்பொருள் மூலம் Blue tooth மற்றும் WiFi , TCP/IP  கொண்டும் கனெக்ட் செய்யலாம்.

Download As PDF

Monday, April 25, 2011

Google Chrome tool bar இல் தமிழ் Unicode எழுத்துருவினை எழுதுவதற்கான மென்பொருள்.

முதலில் கீழே தரப்பட்ட Link ஐ Click செய்து குறிப்பிட் Address க்கு செல்லவும். Google Chrome Tamil Unicode Writer    
பின்னர் Install என்ற Button ஐ Click செய்து மென்பொருளை Install செய்யவும். 



Install செய்த பின்னர் கீழே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள Option உங்கள் Tool bar இல் தோன்றும்.


அவ்வளவுதான் இப்போது நீங்கள் தேவையான நேரத்தில் அதில் Click செய்து தமிழில் செய்துகொள்ளலாம்.



Download As PDF

மென்பொருட்கள் எதுவுமின்றி இணையத்தில் அரட்டையடிக்க...(Skype, MSN, Yahoo, Facebook....)


இணையத்தில் அடி எடுத்து வைத்தவுடனே முதலில் இணைய பயனாளர்கள் கற்றுக் கொள்வது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதே.பெரும்பாலான இணைய பயனாளர்கள் நண்பர்களிடம் அரட்டை அடிக்கவே இணையத்தை பெரிதும் நாடிச் செல்கிறனர். இதுபோன்ற பயனாளர்கள் பல்வேறு இணைய அரட்டைகளில் ஈடுபடுவார்கள். உதாரணாமாக Yahoo, Skype, G-talk... மற்றும் பல இணைய அரட்டைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள். இதுபோன்ற பயனார்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி மென்பொருளை நாடிச்செல்ல வேண்டும்.

சில சூழ்நிலையில் நம்மால் மென்பொருளை நிறுவிக்கொள்ள முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க ஒருதளம் உதவி செய்கிறது.



                                     Go to link---------->>
மேலே  தரப்பட்ட சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று வேண்டிய இணைய அரட்டை நிறுவனத்தை தேர்வு செய்து கொண்டு  நீங்கள் விரும்பிய நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட முடியும்.
வீடியோ மற்றும் ஓடியோ அரட்டையிலும் ஈடுபட முடியும். மொத்தத்தில் அரட்டை அடிக்க சிறப்பானதொரு தளம் இதுவாகும். நாம் இனி தனித்தனி மென்பொருள்களின் உதவியை நாடிச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரே இடத்தில் இருந்து கொண்டு அனைத்து வசதிகளையும் பெற முடியும்.

Download As PDF

Sunday, April 24, 2011

video screen capture செய்வதற்கு இன்னுமொரு மென்பொருள்.

நம் computer desktop இல் இருப்பதை அப்படியே copy செய்ய தெரிந்திருக்கும்.ஆனால் இது சிறிது வித்தியாசமானது .freez video screen capture இந்த மென்பொருளின் மூலம் உங்கள் computer screen இல் என்ன நடக்கிறதோ அதை அப்படியே video வாக எடுக்கலாம் . பல தளங்களில் video டவுன்லோட் செய்யும் வசதி இல்லை ஆனால் இந்த மென்பொருள் மூலம் எப்பேர்ப்பட்ட தளத்தில் இருந்தும் video வை எளிதாக copy செய்யலாம் .


**************************Download************************







Download As PDF

Thursday, April 21, 2011

எந்த மென்பொருளும் இல்லாமல் Folder க்கு Password கொடுப்பது எப்படி..?

எந்தமென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது Windows Xp system இல் முடியும். இதற்கு உங்கள் Hard disk  NTFS முறையில் Format செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இனி எந்த போல்டரை உங்களுடையதாக மட்டும் ஆக்கிட வேண்டுமோ அதில் ரைட் கிளிக் செய்து Properties கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் Windows sharing என்ற Tab ஐக் click செய்தால் “Make this folder private” என்ற பெட்டி தெரியும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் Apply என்ற பட்டனை அழுத்தவும். உங்களுடைய கம்ப்யூட்டர் அக்கவுண்டிற்கு தனியாக Password இல்லை என்றால் கம்ப்யூட்டர் உங்களிடம் இந்த Folder க்கு Password கேட்கும்.


Password கொடுத்து உறுதி செய்தபின் “Create Password” என்ற பட்டனை அழுத்தி பின் Password விண்டோவினை மூடவும். பின் Properties Dialog Box இல் OK அழுத்தி மூடவும். இனி Password தராமல், நீங்கள் உட்பட, இந்த Folder க்குள் நுழைய முடியாது. எனவே, நீங்களும் இந்த Password ஐ சரியாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.


Download As PDF

Ms Office இன் Auto Recover வசதி


Ms office 2007 மற்றும் 2010 ஆகிய தொகுப்புகளில்சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதிAuto Recover வசதி ஆகும்இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் Data வினைத் தானாக Save செய்து வைக்கும்படி செய்திடலாம்இதனால்Power இல்லாமல் போகும் காலத்தில் அல்லது விண்டோஸ் crush ஆகும்போதுநம் Data நமக்குக் கிடைக்கும்இந்த கால இடைவெளியை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்அனைத்து Office 2007 அப்ளிகேஷன் புரோகிராம்களிலும்இந்த கால இடைவெளிமாறா நிலையில் 10 நிமிடங்களாக அமைக்கப்படுகிறதுஇதனை நாம் எந்த அளவிலும் வைத்துக் கொள்லலாம்எடுத்துக்காட்டாக நிமிடங்களாக இதனை செட் செய்தால்நீங்கள் எந்த அப்ளிகேஷன் புரோகிராமில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும்ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு முறைநீங்கள் அமைத்த Data அனைத்தும் உள்ள பைலாக அது  Save செய்யப் பட்டுக் கொண்டே இருக்கும்இதனை எப்படி Excel புரோகிராமில் அமைப்பது என பார்க்கலாம்.
1. Office button னில் கிளிக் செய்திடவும்.
2. கிடைக்கும் மெனுவின் கீழாக “Excel Options” என்று உள்ள பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. 
இப்போது “Excel Options” டயலாக் பாக்ஸ் கிடைக்கும்இதில் உள்ள மெனுவின் இடது பக்கமாக உள்ள Save என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. 
இங்கு “Save AutoRecover information” என்று உள்ள இடத்தில் காட்டப்பட்டுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை இடவும்.
5. 
எத்தனை நிமிட இடைவெளியில்எக்ஸெல் டேட்டாவினை சேவ் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்திடவும்.
6. 
அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இதனை ஆபீஸ் 2003 தொகுப்பிலும் மேற்கொள்ளலாம்எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து  Tools> Options எனச் செல்லவும்கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Save டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்இங்கு Settings என்ற தலைப்பின் கீழ்முதல் பிரிவாக Save Autorecover info every எனக் காட்டப்பட்டுதொடர்ச்சியாக நிமிடத்தை செட் செய்திட சிறிய கட்டம் ஒன்று மேல்கீழ் அம்புக் குறிகளுடன் 
காட்டப்படும்இதனை இயக்கிநீங்கள் விரும்பும் நிமிட இடைவெளியை செட் செய்திடலாம்இங்கு கால இடைவெளியை ஒரு நிமிடமாகக் கூட செட் செய்திடலாம்ஆனால்அது சரியல்லஇதனால்பெரிய Work sheetல் செயல்படுகையில், Auto recover செயல்பாட்டினால்செயல்பாடு தாமதமாகும்.

Download As PDF

Tuesday, April 19, 2011

உங்கள் Mobile இல் எல்லா மொழிகளிலும் browse செய்ய வேண்டுமா?


முதலில் நீங்கள் Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில் install செய்ய வேண்டும்.

இதற்கான தரவிறக்க சுட்டி இதோ .
பின்னர் opera mini browser'ஐ திறந்து அதனுடைய Address bar இல் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும். பிறகு ஒரு Menu உங்களுக்குத் தெரியும்.  அதில் கடைசியாக இருக்கும்  " Use bitmap fonts for complex scripts gvie "  என்ற இடத்தில் NO என்று இருக்கும்.  அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள் பிறகு save செய்து வெளியேறுங்கள்.  அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் மொழி தமிழிலும்தான்.
Download As PDF

Monday, April 18, 2011

உங்கள் கணினி வேகமாக Boot ஆக வேண்டுமா?


கீழே தரப்பட்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
1. நோட்பேட் (Notepad) திறந்து "  del c:\windows\prefetch\ntosboot-*.* /q  " என்பதை தட்டச்சு செய்யுங்க, பின்னர் " ntosboot.bat " என c:\ – ல் Save பண்ணவும்.


2. Start menu போய், "Run..." இல் " gpedit.msc "-னு தட்டச்சு செய்க.


3. பின்னர் "Computer Configuration" – இல், டபுள் கிளிக் பண்ணுங்க, பின்னர் "Windows Settings" டபுள் கிளிக் செய்து, "Shutdown" – என்ற  option ஐ click பண்ணவும்.


4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"- போய், முன்னர் save செய்த File ஐ, open பண்ணுங்க.
5. கிளிக் "OK", "Apply" & "OK",
6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" என தட்டச்சு செய்யவும்.
7. டபுள் கிளிக்  "IDE ATA/ATAPI controllers".
8. "Primary IDE Channel" – இல், Right click பண்ணி,  "Properties" செலக்ட் பண்ணுங்க.
9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
10. "Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
11. இறுதியாகயா உங்கள் கணினிய ரீபூட் (Reboot) செய்து Check பண்ணுங்க.
Download As PDF

500 தமிழ் Fonts இலவசமாக பதிவிறக்க வேண்டுமா?

பதிவிறக்க கீழே அழுத்தவும் .....Download

Download As PDF

Wednesday, April 13, 2011

உங்கள் இணைய Browserகளுக்கு password கொடுத்து பாதுகாக்க வேண்டுமா?

இவ் மென்பொருளின் மூலம் Firefox,internet Explorer,Opera,Chrome,Flockபோன்ற Browser களுக்கு Password  கொடுத்து பாதுகாக்கலாம்.

 Software Install செய்தபின்னர் உங்கள் browser தொடர்பான settings ஐ கீழ்வரும் window வில் செய்யவும்.


இப்போது உங்கள் Browser ஐ Open செய்யும்போது Password கேட்பதை அவதானிக்கலாம்.



மென்பொருளை Download செய்க. (Note -Trial version) 
Download As PDF

Monday, April 11, 2011

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொருள்

இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும். மானிட்டர்ல எப்படி உயிருள்ள ஈக்கள் உலாவும் என்று கேட்டால் நீங்கள் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று. உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும். இவை உயிருள்ள ஈக்கள் எப்படி உலாவுமோ அதே போன்று அந்த செயல் இருப்பதால் இதை நம் குழந்தைகளுக்கு காட்டி அவர்களை குஷி படுத்தலாம். எதெதுக்கோ மென்பொருள் இணைக்கிறோம் நம் குழந்தைகளை குஷிபடுத்த ஒரு மென்பொருள் போட்டால் தான் என்ன.

  • கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.                                    Click here to download
  • மென்பொருள் டவுன்லோட் செய்த உடன் வரும் ZIP பைலை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
  • FLY ON DESKTOP என்ற .EXE பைலை டபுள் க்ளிக் செய்து உங்கள் கணினில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • இப்படி மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில் ஈக்கள் ஓடுவதை காணமுடியும்.
  • உண்மையிலேயே நிஜ ஈக்கள் போல உள்ளது தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கு.

  • இதில் உங்களுக்கு குறிப்பிட்ட ஈயை நீக்க வேண்டுமென்றால் அந்த ஈயின் மீது கர்சரை வைத்து இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள் அது காணமல் போகும்.
  • உங்களுக்கு மேலும் ஈக்களை சேர்க்க விரும்பினால் கீழே டாஸ்க்பாரில் உள்ள ஈயின் மீது வலது க்ளிக் செய்து ஈக்களை சேர்த்து கொள்ளலாம், குறைத்து கொள்ளலாம். 
  • இதை ரன் பண்ண பிறகு உங்க பசங்களுக்கு காட்டுங்க ஆச்சரிய படுவாங்க.       
  •  நன்றி - வந்தேமாதரம் 
Download As PDF

Sunday, April 10, 2011

Face Book இல் Profile Picture இற்கு BADGES இட வேண்டுமா?


Face Book இல் Profile Picture இற்கு எவ்வாறு சின்னம்[BADGES ]  இடுவது என்பது பற்றியதே இப்பதிவாகும்.

முதலில் கீழ் உள்ள GO என்பதை கிளிக் செய்து குறிப்பிட்ட அத்தளத்துக்குச் செல்லுங்கள்.
                                                 GO  ---------->>>>>
இப்போ கீழ் உள்ள பக்கத்தில் Create a picBadge எனபதைதை கிளிக் செய்யவும்.



இப்போ Face Book login செய்தபின் கீழ் உள்ளவாறு விண்டோ காணப்படும்இதில் Browse என்பதில்நீங்கள் Badge ஆக கொடுக்கும் படத்தை தெரிவு செய்து வட்டத்துக்குள் ஏற்றவாறு Adjust செய்யுங்கள்பின்னர் Back Ground Color இல் உங்களுக்கு விரும்பிய நிறத்தைத் தெரிவுசெய்து “PREVIEW” எனும் Button  கிளிக்செய்யுங்கள்.



இது உங்களுக்கு பிடித்திருந்தால் “Submit” என்பதைகொடுக்கவும்அல்லது Edit ஐக் கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.இப்போது தோன்றும் விண்டோவில் கொடுக்கவேண்டிய தகவல்களைக் கொடுத்தபின்னர் “Publish” என்பதைக்கொடுங்கள்.அதன்பின்னர் தோன்றும் விண்டோக்களில் next என்பதைக் கொடுங்கள்இறுதியில் கீழ் உள்ளவாறான விண்டோ தோன்றும்.

இதில் மாற்றங்கள் ஏதுமிருப்பின் செய்தபின்னர் “Publish to Face Book” என்பதைக் கொடுக்கவும்.

இப்போ தோன்றும் விண்டோவில் “Continue to Face Book” என்பதைக் கொடுக்கவும்இப்போ இறுதியாக உங்கள் Face Book கணக்கானது திறக்கும்இதில் Make this my profile Picture என்பதை கிளிக் செய்யவும்.


அவ்வளவு தான்உங்கள் Face Book இல் Profile Picture இல்உங்கள் விருப்பப்படி சின்னம் சேர்கப்பட்டுவிடும்.



Download As PDF
Related Posts Plugin for WordPress, Blogger...